இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் தங்கள் பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் பெறவில்லை. அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே மீட்டெடுத்து, ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். எனவே திமுக அரசு, அதன் தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: