திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 2.55 கோடி பேர் சாமி தரிசனம்: ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கை


ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (2024) கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் வேண்டுதலின்படி கோவில் உண்டியலில் 1,365 கோடி ரூபாயை கோவிலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சுமார் 99 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலைமுடிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

கோவிட் தொற்றுக்கு பிறகு ரூ.3 கோடி வரை தினந்தோறும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வார இறுதி நாட்களில் 3.85 கோடியாகவும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். டிசம்பர் 31 ஆம் தேதி ஒரே நாளில் ரூ.4 கோடியே 10 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்த ஆண்டில் ஜனவரி 1 ஆம் தேதி 69,630 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.3 கோடியே 13 லட்சம் காணிக்கையாக செலுத்தினர்.

18 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிட் தொற்றுக்கு முன்பு 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் கோவிட் தளர்விற்கு பிறகு தினசரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடிய எண்ணிக்கை 70 ஆயிரம் ஆக குறைந்தாலும் உண்டியல் காணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ஆண்டுக்கு 1200 கோடியை தாண்டி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருவதால் உண்டியல் காணிக்கை வருமானம் 1200 கோடிக்கு மேல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 2.55 கோடி பேர் சாமி தரிசனம்: ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: