மத்தியபிரதேசத்தில் சொத்து குவிப்பு மறைந்த சிறைத்துறை டிஐஜியின் ரூ.4.68 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: மத்தியபிரதேசத்தில் முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த டிஐஜியின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபால் சிறைச்சாலையில் டிஐஜியாக பதவி வகித்து வந்த உமேஷ் குமார் காந்தி தற்போது இறந்து விட்டார். ஆனால் உமேஷ் குமார் காந்தி பதவியில் இருந்தபோது முறைகேடாக ரூ.5.13 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், மறைந்த உமேஷ் குமார் காந்தி, அவரது குடும்பத்தினர் தொடர்புடைய ரூ.4.68 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

The post மத்தியபிரதேசத்தில் சொத்து குவிப்பு மறைந்த சிறைத்துறை டிஐஜியின் ரூ.4.68 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: