இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி அஜ்மீர் தர்காவுக்கு மலர்போர்வை அனுப்பினார் பிரதமர் மோடி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் வழங்கினார்

ஜெய்ப்பூர்: இந்து அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி வழங்கிய மலர் போர்வை நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற தர்காவில், ஆண்டுதோறும் ஜனவரி 4ம் தேதி உருஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். இந்த விழாவில் பயன்படுத்துவதற்காக சதார் எனப்படும் மலர் போர்வையை பிரதமர் மோடி வழங்கினார். இந்த மலர் போர்வையை ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று முறைப்படி தர்கா நிர்வாகத்திடம் வழங்கினார்.

இந்து சேனாவின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா, அஜ்மீர் தர்கா தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். அஜ்மீர் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் ஒப்புக்கொண்டது. பிரதமர் மோடி சார்பில் மலர்போர்வை வழங்குவது தொடர்பாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா, நீதிமன்றத்தில் இவ்வழக்கு முடிவுக்கு வரும் வரை, பிரதமர் மோடி மலர்போர்வை வழங்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அதையும் மீறி பாரம்பரிய வழக்கப்படி பிரதமர் மோடி சார்பில் நேற்று மலர் போர்வையை அஜ்மீர் தர்காவில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒப்படைத்துள்ளார்.

The post இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி அஜ்மீர் தர்காவுக்கு மலர்போர்வை அனுப்பினார் பிரதமர் மோடி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: