இதனால் ஊட்டி வருபவர்கள் தவறாமல் தொட்டபெட்டா செல்வார்கள். இச்சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கிமீ தூரத்திற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும். ஊட்டியில் தற்போது உறைபனி பொழிவு நிலவிவரும் நிலையில் பகலில் வெயிலான காலநிலை நிலவுவதால் இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்த படியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
இதனிடையே ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள சுற்றுலா தலங்களை தவிர்த்து நகருக்கு வெளியில் உள்ள பைக்காரா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதற்கேற்ப வெயிலுடன் குளு குளு காற்று வீசியதால் இதனை அனுபவித்த படியே அங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்தும், பள்ளத்தாக்கு பகுதியில் இருந்தும் இயற்கை அழகை பார்த்து ரசித்தனர்.
The post வெயிலுடன் குளுகுளு காற்று வீசியதால் ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.