வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல்!

மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சச்சினின் மிக நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், தற்போது மாத ஓய்வூதியமாக BCCI-யிடம் இருந்து ரூ.30,000 பெற்று வருகிறார். வீடு பழுதுபார்ப்புக்கு ரூ.15,000 கட்டணம் செலுத்த முடியாமல், அதற்கு பதில் தனது ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் தனது வீட்டையே இழக்க நேரிடும் என அவர் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

 

The post வினோத் காம்ப்ளி கடும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுவதாக தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: