இந்தியாவில் 1901ல் தொடங்கி தற்போது வரையில் உள்ள காலகட்டத்தில், 2024ம் ஆண்டை மிக வெப்பமான ஆண்டாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம் மிகுந்த ஆண்டாகவே இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தெரிவித்துள்ளது.