அவற்றை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் சங்கரிடம் விசாரணை நடத்தினர். அவர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த மைக்கேல் என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கியதாகவும் தமிழ்நாடு கேரளா எல்லையான களியக்காவிளையை சேர்ந்த நாத் என்பவரிடம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சங்கர், மைக்கேல்,நாத் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவுகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சங்கர், நாத், மைக்கேல் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
The post ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 300 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு; 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.