திருப்பூர், ஜன.1: மின்சார சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் பாஜ அரசு மின்சாரத்துறையை தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து குமரன் நினைவகம் முன்பாக நேற்று சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் மின்சாரத்தை தனியார் மாயமாக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
37 நாட்களாக தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து போராடும் அரியானா மாநிலம் சண்டிகர் பகுதி மின்சார ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் மூர்த்தி, சிஐடியு தொழிற்சங்க செயலாளர் ரங்கராஜ், கட்டுமான சங்க செயலாளர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.