திருப்பூர், டிச.31: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆட்டோ ஓட்டுனர் பொதுநல சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தினர்.
அந்த கோரிக்கை மனுவில், திருப்பூர் மாநகரில் பாதுகாப்பு இன்றி இயங்கும் பைக் டாக்ஸி எனப்படும் ரேபிடோவை உடனடியாக தடை செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான கால் டாக்ஸிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். ஆன்லைன் அபராத கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
The post ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.