கூடுவாஞ்சேரி, ஜன.1: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பணியாற்றி வரும் 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், நகர மன்ற தலைவர் எம்கேடி கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன், வார்டு கவுன்சிலர் ஜெயந்திஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புடவை, வேட்டி, கேக் மற்றும் காலண்டர் ஆகியவை வழங்கப்பட்டது.
The post தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.