கிணற்றின் மேல் இரும்பு வெளியோ சிமென்ட் சிலாப்போ அமைக்கப்படாமலும் உள்ளது. மேலும், அப்பகுதியில் உலாவும் குரங்குகள் உணவு கழிவுகளை கிணற்றினுள் போட்டு செல்வதால் கிணற்று நீர் மாசடைந்துள்ளதாகவும் மாசடைந்த இந்த நீரை தான் பருகி வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ந்து இந்த குடிநீரை பருகி வருவதால் கிராம மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் இக்குடிநீர் கிணற்றை முறையாக பராமரிப்பது அல்லது புதிய குடிநீர் கிணற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பெருக்கரணை கிராமத்தில் திறந்தநிலையில் காணப்படும் குடிநீர் கிணறு: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.