இத்திட்டத்தில் எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் தொழில் பிரிவுகளில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு எற்படுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய காலபயிற்சிகள், உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சியும் வழங்கப்படும். மேற்கண்ட வசதிகளுடன் எவ்வித கட்டணமும் இன்றி பயிற்சி சான்றிதழும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் நாளை (4.1.2025) அன்று காலை 9.30 மணிமுதல் மாலை 3 வரை செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம், தரை தளத்தில் நடைபெறும், ‘இளைஞர் திறன் திருவிழா”வில் கலந்து கொண்டு, தாங்கள் விருப்பப்படும் வேலை சார்ந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் இளைஞர்கள் தங்கள் ஊராட்சிகளில் உள்ள சமுதாய வல்லுநர்கள் (வேலை வாய்ப்பு) மூலமாகவும் அல்லது தங்கள் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகு வட்டார மேலாளர்களை அணுகி விவரங்களை பெற்று பயிற்சிகளில் சேர்ந்து பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்கள் தேவைப்படுவோர், அச்சிறுப்பாக்கம்- 95665 05051, சித்தாமூர்-87782 40051, லத்தூர்-99768 60716, காட்டாங்கொளத்தூர்-82486 74283, மதுராந்தகம்-96266 34105, புனித தோமையர் மலை-96775 41910, திருக்கழுக்குன்றம்-98944 96522, திருப்போரூர்-98425 34416 ஆகிய வட்டாரங்களில் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி திட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.