மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளித்த 322 மனுக்களுக்கு உடனடி தீர்வு

*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் கலெக்டர்அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளித்த 322 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சித்தூர் கலெக்டர் சுமித் குமார் தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதினால் முகாமில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து 322 பேர் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டர் சுமித் குமாரிடம் வழங்கினர்.

மனுநீதி நாள் முகாமில் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வேண்டும், ரேஷன் கார்டு வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், எங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும், டிகேடி நிலத்துக்கு பட்டா செய்து தர வேண்டும் என்றும் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர்.

பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக தங்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுமித் குமார் மனு நீதிநாள் முகாமில் பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட இணை கலெக்டர் வித்யாதரி, பயிற்சி கலெக்டர் ஹிமா வம்சி டி ஆர் ஓ மோகன் குமார் மற்றும் ஏராளமான பல்வேறு துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய புகார்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

The post மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளித்த 322 மனுக்களுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: