இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவை தாண்டி அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்ததற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமலாக்கத்துறையின் இந்த செயல் மனிதாபிமானமற்றது, அராஜகமானது என்றும் அவர்கள் கூறினர். குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை வலுக்கட்டாயமாக வாக்குமூலம் அளிக்க வைக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சுரங்க முறைகேடு விவகாரத்தில் பன்வாக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் இல்லை எனக்கூறி அவர் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்தனர். அத்துடன் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் மனிதாபிமானத்துடனும் முறையாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது/
The post குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் 15 மணி நேர விசாரணை.. அமலாக்கத்துறையின் செயல் மனிதாபிமானமற்றது, அராஜகமானது : உச்சநீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.