தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: நிதின் கட்கரி

டெல்லி: தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.36 கோடி ஒதுக்கீடு. திருப்பூரில் மேட்டுக்கடை-மூத்தம்பாளையம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்த ரூ.6.84 கோடி ஒதுக்கீடு. மதுரையில் மாநில நெடுஞ்சாலை 154ஐ விரிவுப்படுத்த ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை, திருச்சியில் மேலத்தூர்-பத்தலப்பேட்டை சாலையை விரிவுபடுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு. திண்டுக்கல்லில் தர்மத்துப்பட்டி, ஆடலூர், தாண்டிக்குடி சாலையை விரிவுபடுத்த ரூ.5.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Related Stories: