உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோத்தகிரியில் கடும் குளிரில் மாநில கைப்பந்து போட்டிகள் விறுவிறுப்பு

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கோத்தகிரியில் கடும் குளிரில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஆல்வின் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற இந்த கைப்பந்து போட்டியில் 20 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இரவு கடும் குளிரில் நடைபெற்ற இறுதிப் போட்டியை திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் வாசிம் ராஜா துவக்கி வைத்தார். இரவு, பகல் என 2 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற இன்கம் டேக்ஸ் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பையை விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் வாசிம் ராஜா வழங்கி கௌரவித்தார்.

இதேபோல மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற கீழ் கோத்தகிரி ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம் ராஜு 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பரிசு கோப்பை வழங்கி கௌரவித்தார். இதேபோல சிறப்பாக விளையாடிய நான்கு வீரர்களுக்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலா 5 ஆயிரம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில் ரங்கராஜன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் தீபக், பேரூர் கழக செயலாளர் காளிதாஸ்,பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் உட்பட கடுங்குளில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோத்தகிரியில் கடும் குளிரில் மாநில கைப்பந்து போட்டிகள் விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: