கரூர் மாநகராட்சி பகுதி வழியாக கட்டுமான பொருட்கள் ஏற்றிசெல்லும் லாரிகளுக்கு தார்ப்பாய் அவசியம் தூசி பறப்பதால் பொதுமக்கள் அவதி

கரூர், டிச.24: கரூர் மாநகர பகுதிகளில் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் வீடு, அலுவலகங்கள் போன்ற கட்டுமான பணிகள் தற்போது அதிகளவு நடைபெற்று வருகிறது.இந்த பணிகளுக்காக செங்கல், இரும்பு, ஜல்லிக் கற்கள் போன்றவை வேன் மற்றும் லாரிகளில் ஏற்றப்பட்டு மாநகர பகுதிகளின் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

அவ்வாறு கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் தார்ப்பாய் போன்றவற்றை கொண்டு மூடிச் செல்லாமல் திறந்த நிலையில் சென்று வருகிறது.திறந்த நிலையில் செல்லும் இதுபோன்ற வாகனங்களில் இருந்து காற்றின் காரணமாக தூசிகள் பறந்து, பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது சிறு விபத்துக்களும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் கரூர் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இதுபோன்ற வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் இதுபோன்ற நிகழ்கள் முற்றிலும் குறைந்து விடும் எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாநகராட்சி பகுதி வழியாக கட்டுமான பொருட்கள் ஏற்றிசெல்லும் லாரிகளுக்கு தார்ப்பாய் அவசியம் தூசி பறப்பதால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: