இதற்கு அந்த மாணவி, ‘‘எனக்கு தைரியம் உள்ளது’’ என்று தெரிவித்து, துணிச்சலாக ‘ஐ லவ் யூ’ என கூறி வீடியோ அனுப்பியுள்ளார், மாணவி பேசிய வீடியோவை அந்த நபர், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பதிவிட்டுள்ளார். இதனை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதற்கிடையே இந்த பதிவை, சிறுமியின் ெபற்றோரும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கேட்டபோது சிறுமி நடந்த விபரங்களை கூறியதுடன், இந்த நபர் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், அரியானாவில் உள்ள குர்கிராம் என்ற பகுதியில் இருந்து, இந்த மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது தெரிய வந்தது. அதில் மாணவியை டார்ச்சர் செய்தது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்ராம் (23) என்பதும் உறுதியானது. இதையடுத்து போக்சோ வழக்குப்பதிந்த தனிப்படையினர் உத்தரகாண்ட் சென்று அங்கு கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிக்கும் மாணவர் தினேஷ்ராமை கைது செய்தனர். பின்னர் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
The post ‘ஐ லவ் யூ’ என வீடியோ அனுப்ப வைத்து பள்ளி மாணவிக்கு ‘டார்ச்சர்’ உத்தரகாண்ட் மாணவர் கைது: கொடைக்கானலில் பரபரப்பு appeared first on Dinakaran.