ராயக்கோட்டை, ஜன.3: ராயக்கோட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வரை 30 கி.மீட்டர் தொலைவிற்கும், பாலக்கோடு வரை 25 கி.மீ. தொலைவிற்கும், சூளகிரி வரை 20 கி.மீ.தொலைவிற்கும், ஓசூர் மற்றும் கெலமங்கலம் வரை சாலைகளின் இரு புறமும் மாந்தோட்டங்கள் அதிகளவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, மா விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. அதோடு மாம்பழங்களில் புழுக்கள் இருந்ததால், மாங்கூழ் நிறுவனங்களுக்கு விற்பனைக்கு அனுப்பினர். தை மாத பனிப்பொழிவில் பூத்த மாம்பூக்களில் மட்டுமே காய்கள் காய்த்ததாகவும், தை மாதத்திற்கு பிறகு மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்தாலும் அது மாங்காய்களை விடாது. அதே சமயம், டிசம்பர் மாத இறுதியில் பூக்க தொடங்கி, தை மாத இறுதி வரை பூக்கும் மரங்களில் மட்டுமே நல்ல காய்ப்பு இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் தை மாதத்திற்கு முன்பே மாம்பூக்கள் பூத்துக்குலுங்குவதால், நடப்பாண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
The post மாமரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள் appeared first on Dinakaran.