கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரியில் கரீம் சாய்பு ஏரிக்கு செல்லும் கால்வாயில். நேற்று முன்தினம், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார்? அவர் கால்வாயில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாரா? அல்லது அவரை மர்ம நபர்கள் கொலை செய்து, சடலத்தை கால்வாயில் வீசி விட்டு சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஏரிக்கால்வாயில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.