முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்ய போதிய இடம் வழங்காததன் மூலம், அவரது கண்ணியத்திற்கும், ஆளுமைக்கும் ஒன்றிய அரசு நியாயம் செய்யவில்லை. இறுதிச் சடங்கில் அரசியல் மற்றும் குறுகிய மனப்பான்மையோடு மோடி அரசு செயல்பட்டது கண்டனத்துக்குரியது.
பொது மயானத்தில் அவர் உடலை எரியூட்டி அந்த மாமனிதரை அவமதித்திருக்கிறது. அவரது ஆட்சிக் காலத்தில், நாடு பொருளாதார வல்லரசாக மாறியது, அவரது கொள்கைகள் இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. பொது மயானத்தில் தான் அவர் உடல் எரியூட்டப்பட வேண்டுமா? எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரதமர் என்றால் மோடி எரியூட்ட இடம் கூட தரமாட்டாரா? ஒரு மகத்தான மனிதரின் மரணத்தில் கூட இப்படி கீழ்த்தரமான அரசியலை உங்களால் எப்படிச் செய்ய முடிகிறது?. 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மாமனிதருக்கு இறுதிச் சடங்கு செய்ய இடமில்லையா? அல்லது மோடியின் மனதில் இடமில்லையா?
The post மன்மோகன் சிங் இறுதிச்சடங்கில் மோடி அரசு குறுகிய மனப்பான்மையோடு செயல்பட்டது: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.