பெரம்பூர்: ஓட்டேரி பட்டாளம் எத்திராஜ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (28). இவர் சொந்தமாக மகேந்திரா சிட்டி டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு சவாரி முடித்து டோபி கானா ஹவுசிங் போர்டு அருகே தனது வேனை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருக்கும் வினோத் (27) என்ற நபர் குடிபோதையில் எங்கள் வீட்டின் எதிரே எதற்காக வேனை நிறுத்துகிறீர்கள் என கேட்டு அங்கிருந்த பெரிய கற்களை கொண்டு வேனின் இரண்டு கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் காளீஸ்வரன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் ஓட்டேரி கோபி கானா ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருக்கும் வினோத் (27) என்ற நபரை கைது செய்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வீட்டின் முன் நிறுத்திய வேன் கண்ணாடியை உடைத்தவர் கைது appeared first on Dinakaran.