சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைக்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். ரொக்கத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்துள்ள மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்.