இது குறித்து தெரிவிக்கப்பட்டதாவது , துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலை. மானியக்குழுவின் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது. யு.ஜி.சியின் புதிய விதிகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகளுக்கும், ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் யுஜிசி விதிகள் திருத்தப்பட்டதற்கும் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வித்துறை சாராதவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. பல்கலை. மானியக்குழு விதிகள் திருத்தம் மாநில உரிமைகள் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அரசியல் சட்டப்படி கல்வி பொதுபட்டியலில் உள்ளதால் தன்னிச்சையாக யுஜிசி விதிகளை மாற்ற முடியாது. விதிகளை தன்னிச்சையாக மாற்றுவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தெரிவித்தார்.
The post யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.