சென்னை: யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்ட விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தினார். யுஜிசியின் நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு மூலமாக மருத்துவகனவை சிதைக்கும் செயலை பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு செய்து வருகிறது. எல்லா முறைகேடும் நடக்கும் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு உள்ளது என தெரிவித்தார்.
The post யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.