அதில், கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிடப்பில் இருந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.11 கோடி திருக்கோயில்களுக்கு வருமானமாக ஈட்டப்பட்டிருக்கிறது. மேலும் இத்திட்டம் தொடரும். திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த ஐபோனை ரூ.10,000-க்கு ஏலத்தில் கேட்ட உரிமையாளரிடமே நேற்று கொடுத்துவிட்டோம். இத்தகைய, கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் ஏலத்தில் திருப்பி தரப்பட்டதை மேற்கொள்ள காட்டி தீர்வு காண முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் அரசு திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.
The post திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.