மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை

*பொதுமக்கள் கண்டுகளிப்பு

மதுரை : கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி வெள்ளி விழா வரும் 30ம் தேதி துவங்கி 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதனை நினைவூட்டும்விதமாக திருவள்ளுவர் சிலை வைப்பது, பலூன் பறக்க விடுவதென தமிழ்நாடு அரசு செய்தித்துறை சார்பில் பிரசாரங்கள் வேகமடைந்துள்ளன. இதன்பேரில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 8 அடி உயரத்தில் நின்ற நிலையிலான, கன்னியாகுமரியில் வடிவமைத்துள்ள சிலையை ஒத்த திருவள்ளுவர் சிலை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் படத்துடன், வெள்ளி விழா கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட்களுக்கு வந்து செல்லும் பயணிகள், வாகன ஓட்டிகள் என பலரும் இதனை பார்த்து ரசித்துச் செல்கின்றனர். சிலர் சிலை முன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை appeared first on Dinakaran.

Related Stories: