சமத்துவ சமுதாயத்தை மீட்க நமது பணியில் வெல்ல வாழ்த்துகள் என்று கேட்க வந்துள்ளோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கம்பீரமான செவ்வணக்கம். 100 வயதை கடந்து சமுதாயத்துக்கு சேவையாற்றும் வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. வயதால் எனக்கு தம்பி, அனுபவத்தில் எனக்கு அண்ணன் என்று நல்லகண்ணுவை கலைஞர் குறிப்பிட்டார்.
கலைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டவர் நல்லகண்ணு. நல்லகண்ணுவுடனான தோழமையை இறுதிவரை பேணிப் பாதுகாத்தார் கலைஞர். 2022-ல் தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுவுக்கு வழங்கினேன். தகைசால் விருதுடன் ரூ.10 லட்சம் தந்தோம்; அதை மட்டுமல்ல அதோடு ரூ.5,000 சேர்த்து தமிழ்நாடு அரசு நிவாரண நிதிக்கு வழங்கியவர். இயக்கத்துக்காக இயக்கமாகவே வாழ்ந்து வரும் மாமனிதர் நல்லகண்ணு.
12 வயதில் போராட்டக்காரனாக உருவாகி 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் நல்லகண்ணு. பல மிரட்டல்கள் விடுத்தாலும் விடுதலை உணர்ச்சிகளை நல்லகண்ணு விட்டுவிடவில்லை. ஒரு இயக்கமும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது அந்த இயக்கத்தின் மாபெரும் தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காகவே உழைத்து இன்று வரலாற்றில் உயர்ந்து நிற்கிறார் நல்லகண்ணு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
The post கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! appeared first on Dinakaran.