நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி பாதிரி மூலா பகுதியில் 3 வீடுகளை தாக்கிய புல்லட் யானை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியது. புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வசதியாக சீனிவாசன், விஜய் என்கிற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகள் உதவியுடன் புல்லட் யானையை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அய்யன்கொல்லி பகுதியில் பதுங்கிய புல்லட் யானை மீது நேற்று மாலை கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். யானை சிறிது தூரம் சென்று நின்ற பின் கும்கி யானை உதவியுடன் புல்லட் யானையின் அருகே சென்று கால்களில் கயிறுகளை கட்டி மரத்தில் கட்டினர். பின்னர் லாரியில் ஏற்றி தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
The post வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது appeared first on Dinakaran.