வெறும் அரசியல்வாதியாக மட்டுமின்றி புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக திகழந்தவர் மன்மோகன் சிங். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் அவர் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மன்மோகன் சிங் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசின் பிரதமாராக இருந்தார்.
இந்நிலையில் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால், இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. நேற்று முதல் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அதன்படி ஜனவரி 01ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும். தமிழ்நாட்டில் 7 நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவித்துள்ளது. மாநிலங்களில் எந்த நேரத்திலும் அதிகாரப்பூர்வமான பொழுதுபோக்குகள் இருக்காது அரசு இறுதிச் சடங்கு டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படும்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு: தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு appeared first on Dinakaran.