டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனையின் முடிவில், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்ல தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மன்மோகன் சிங்கின் நினைவைப் போற்றவும் அவரின் நீடித்த பெருமையை முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மால்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும். இறுதி சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் appeared first on Dinakaran.