இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. உயர் நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இன்றே இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தாமாக முன்வந்து முறையீடு செய்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.