7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின் மன்மோகன் சிங்கின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.
The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங். மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி நேரில் அஞ்சலி! appeared first on Dinakaran.