புதுச்சேரி அரசு அதிகாரிகள் 14 ஆயிரம் பேர் ஜனவரி 31க்குள் சொத்துவிவரம் காட்ட வேண்டும்: தலைமை செயலாளர் அதிரடி


புதுச்சேரி: நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பணி விதிகளின்படி ஒவ்வொரு அதிகாரியும் தங்களது முந்தைய ஆண்டின் அசையா சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அடுத்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி 31ம் ேததிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்ைல என்றால் அவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவைகள் வழங்கப்படாது. இந்நிலையில், புதுச்சேரி அரசின் தலைமை செயலர் உத்தரவுப்படி சார்பு செயலர் கண்ணன் அனைத்து துறை செயலர்கள், தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புதுச்சேரி அரசு துறைகளில் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ பதவிகளை வகிக்கும் 14 ஆயிரம் அதிகாரிகளுக்கும் 2024ம் ஆண்டிற்கான சொத்து விவரங்களை https://esalary.py.gov.in/ipr என்ற போர்ட்டலில் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து கணக்குகளை தாக்கல் செய்ய வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை போர்ட்டல் திறந்திருக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ அதிகாரிகளும், பேசாப்ட்’ (இ-சம்பளம்) சம்பளம் பெறும் சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், மேற்கூறிய போர்ட்டலில் ஆன்லைனில் தங்கள் வருமானத்தை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள அதிகாரிகள் சொத்துக் கணக்கினை ஹார்ட் காப்பியாக சமர்ப்பிப்பார்கள். அவர்களுக்கு ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான அத்தகைய வசதி ஏற்படுத்தும் வரை எக்செல் தாளில் விவரங்களை vigil@py.gov.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியில் வழங்கலாம். கடவுச்சொல்லை மறந்த அரசு அலுவலர்கள் தங்கள் பிறந்த தேதியைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை மீட்டெடுக்க முடியும்.

ஆன்லைனில் சொத்துக் கணக்குகளை 31ம் தேதிக்குள் கட்டாயமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால், காரணங்களை ஏற்க முடியாது. அவர்கள் மீது விஜிலென்ஸ் அனுமதி மறுக்கப்படுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post புதுச்சேரி அரசு அதிகாரிகள் 14 ஆயிரம் பேர் ஜனவரி 31க்குள் சொத்துவிவரம் காட்ட வேண்டும்: தலைமை செயலாளர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: