அதன்படி சரவணன், நரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, குளியலறையில் மின்சாரம் பாய்ந்து நிர்வாண நிலையில் நரேஷ்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி appeared first on Dinakaran.