தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை மட்டும் 1,329 பேர் இழந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நாகை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்திருந்த ஏராளமான வெளி மாநிலம், மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனை நினைவூட்டும் வகையில், கடலோர மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக, இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ பொதுமக்கள் என அனைவரும் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பழவேற்காடு பகுதியில் 20வது ஆண்டு சுனாமிதின நினைவு நிகழ்ச்சியில் வைரவன்குப்பம் கடற்கரைப் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இனி ஒரு பேரிடர் பொதுமக்களை தாக்காமல் கடல் அன்னை பாதுகாக்க வேண்டியும், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தி கடல் அன்னையை வணங்கி மலர்களை தூவி கடலில் பாலை ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாட்டை வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள் செய்தனர். மேலும், இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post வைரவன்குப்பம் கடற்கரையில் சுனாமி தின நினைவு அஞ்சலி appeared first on Dinakaran.