அந்த வகையில் சென்னை மெரினா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பொதுமக்களுடன் மவுன ஊர்வலத்தில் பங்கேற்றார். இந்நிகழ்வில் இறந்தவர்கள் புகைப்படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி மற்றும் கடற்கரையில் பால் ஊற்றியும் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமாகா பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன், மீனவர் பேரவை செயலர்கள் நாக்ஸ் பெர்னாண்டோ, ஜெயக்குமார், இளைஞரணித் தலைவர் ரஞ்சித், கொள்கை பரப்பு செயலாளர் சித்தார்த்தன், மகளிரணித் தலைவர் ஜெயந்தி சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏராளமான மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
The post சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்.. உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி அஞ்சலி!! appeared first on Dinakaran.