ரயில் முன் தள்ளி மாணவி கொலை: குற்றவாளிக்கு டிச.30ல் தண்டனை விவரம்

சென்னை: சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி இளம்பெண்ணை கொன்ற வழக்கில் சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவி சத்தியபிரியா கொலை வழக்கில் சதீஷை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 அக்.13இல் நடந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரித்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளி சதீஷுக்கான தண்டனை விவரம் டிச.30ஆம் தேதி அறிவிக்கப்படும் என மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

The post ரயில் முன் தள்ளி மாணவி கொலை: குற்றவாளிக்கு டிச.30ல் தண்டனை விவரம் appeared first on Dinakaran.

Related Stories: