சென்னை: கொடி நாளில் இந்தியாவிலே அதிகபட்சமாக ரூ.67.54 கோடி நிதி வசூல் செய்து தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ரூ.7.7 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.6.6 கோடியும், திருச்சி மாவட்டத்தில் ரூ.4.5 கோடியும் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொடி நாளில் தமிழ்நாட்டில் ரூ.64.29 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிச.7-ம் தேதி நாடு முழுவதும் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. படைவீரர்களின் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து கொடிநாளில் திரட்டப்படும் நிதி அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்படுகிறது.
The post கொடி நாள்: ரூ.67.54 கோடி நிதி வசூல் செய்து தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை appeared first on Dinakaran.