அதேபோல 3088 உயர்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்கு ரூ.1 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரம், 3136 மேனிலைப் பள்ளிகளுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரூ.1 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த ரூ. 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக பாக்கியுள்ள கட்டணத்தை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் நிதியில் இருந்துதான் இந்த செலவு செய்யப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இன்னும் நிறுத்தி வைத்துள்ளது.
The post சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு appeared first on Dinakaran.