வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது. சென்னை நகரில் நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமானோர் சாலைகளில் கூடி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சான்டாகிளாஸ் வேடமணிந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வலம்வந்து பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கும் நேரமான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஏராளாமானோர் ஒளிரும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனைக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் வரவேற்றனர். பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பிரார்த்தனைக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் வரவேற்றனர். பிரார்த்தனை முடிந்ததை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, கேக் வழங்கி மகிழ்ந்தனர்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும், புது துணி உடுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னையில் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், சாந்தோம் தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆலயம், லஸ் பிரகாச மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலம் அருகில் உள்ள கதீட்ரல் தேவாலயம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
The post தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; ஒருவருக்கொருவர் கேக் வழங்கி உற்சாகம் appeared first on Dinakaran.