துணை முதல்வர் பிறந்தநாள் 1000 பெண்களுக்கு சேலை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பூங்கா நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பர்க்கதுல்லா கான், நிர்வாகிகள் சொக்கலிங்கம், தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், சீனிவாசன், ராமச்சந்திரன், பரமேஸ்வரன், தயாளன், வரதன், முரளி, சிற்றரசு, ஜெயக்குமார், அசோக் குமார், சண்முகம், சதீஷ், விக்கி, குமார், கார்த்திக், ராஜேஷ் முன்னிலை வகித்தனர். சவுந்தர்ராஜன், தியாகராஜன், சுகுமார், பூவண்ணன், ஜெய்சங்கர், பிரபு, ஏசுபாலன், ஜனார்த்தனன், எட்டியப்பன் வரவேற்றனர்.

அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் 12 பேருக்கு எரிவாயு சிலிண்டர், 1000 பெண்களுக்கு சேலைகள், 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 10 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், 5 பேருக்கு இஸ்திரி பெட்டிகள், 2 குழுக்களுக்கு வாலிபால், 2 குழுக்களுக்கு கேரம் போர்டு, 2 குழுக்களுக்கு செஸ் போர்டு ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நடுகுத்தகை ரமேஷ், பேச்சாளர்கள் ஈரோடு இறைவன், செல்வமணி ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர் விமல் வர்ஷன், சன் பிரகாஷ், முனுசாமி, மோகன், குமரேசன், தென்னவன், ஜெய புகழேந்தி, லாசர், திராவிட தேவன், மேகநாதன், அப்புன்ராஜ், செல்வி குமார், கனகவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.கே.சரவணன் எஸ்.சிவப்பிரகாஷ் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் செய்திருந்தார்.

The post துணை முதல்வர் பிறந்தநாள் 1000 பெண்களுக்கு சேலை: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: