சிறப்பு முகாமில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லா கான், சவுந்தரராஜன், சுகுமார், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாலு, புஜ்ஜி ராஜி, ரகுபதி, கருணாகரன், சீனிவாசன், நாகேஷ், தசரத நாயுடு, வி.ஹரி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது வீட்டுமனைக்கான அனைத்து ஆவணங்களையும் காண்பித்து மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர். முகாமில் மனுக்களை வழங்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் பெற்று பூர்த்தி செய்து வழங்கினால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் வாசுதேவன் தெரிவித்தார்.
The post இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான மனுக்கள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பெற்றார் appeared first on Dinakaran.