இதுபோல, பூந்தமல்லி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான கே.எஸ்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன் கலந்துகொண்டு எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இதில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சி.சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி: திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருத்தணி ஒன்றிய அவைத்தலைவர் டி.வி.புரம் ஊராட்சி மன்ற தலைவர் குப்பன், முன்னாள் எல்டி பேங்க் தலைவர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய பொருளாளர் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி, கிளை செயலாளர் மத்தூர் அண்ணாமலை, நிர்வாகிகள் ராமச்சந்திரன், குமார், தணிகாசலம், ரமணா, சசிதரன், நரசிம்மன் உள்பட பல்லர் கலந்து கொண்டனர்.
The post எம்ஜிஆர் நினைவு நாள் 800 பேருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.