ஆவடி: பெரியார் 51வது நினைவு நாளை முன்னிட்டு ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ரமேஷ், மாநகர மேயர் உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் நாராயண பிரசாத், ராஜேந்திரன், பொன்விஜயன் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post பெரியார் நினைவுதினம் அமைச்சர் நாசர் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.