ராஜஸ்தான்: கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.