அவரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், பள்ளிக்கல்வி துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனாரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. மேலும், அவ்வளாகம் “பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அன்பழகனின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும், பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்; கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர் அவர்கள்!. “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்!. இவ்வாறு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.
The post பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள்: உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.