அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும். சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய இலவச பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன், தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பே.நி, மத்திய பணிமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை-1, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், ஐயப்பன் தாங்கல், வடபழனி,
கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி, ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை-1, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் – மெப்ஸ் பே.நி., பூந்தமல்லி., பெரம்பூர் பே.நி, வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 42 இடங்களில் மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும். இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்: எம்டிசி நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.