டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும். மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டதுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது: கனிமொழி எம்.பி பேட்டி appeared first on Dinakaran.